அழியவிருசக்கும் ஒரு பறவையைக் காப்பாற்ற (3) மரங்கொத்தி

 

ஒரு சமயம் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு வேலை நிமித்தம் காரில் சென்று கொண்டிருந்தேன்.  திருச்சி நகர எல்லையைக் கூடத் தாண்டவில்லை.  என் முன்னே பறந்து சென்று கொண்டிருந்த ஒரு பறவை திடீரெனத் தரையில் விழுவதைப் பார்த்தேன்.

 

Text Box:  சட்டென்று காரை நிறுத்தி அருகில் சென்று பார்த்த போது தெரிந்தது அது ஒரு தங்க நிற முதுகு கொண்ட மரங்கொத்தி என்று. 

 

கண்கள் மூடி இருந்தன. இதயத் துடிப்பு இருந்தது.  என்னிடம் இருந்த குடி நீரிலிருந்து ரெண்டு சொட்டு தண்ணீரை அதன் திறந்த வாயில் ஊற்றினேன்.          Malabar Golden backed Wood-pecker (Dinopium bengalensis)

மூடிய கண்கள் சற்றே திறந்தன.  தொண்டையில் சிறிது அசைவும் அத்துடன் மூடிய கண் இமைகள் முழுவதுமாகத் திறப்பதையும் பார்த்த எனக்கு நம்பிக்கை வந்தது.  உடனே வீட்டிற்குத் திரும்பினேன் மரங்கொத்தியுடன்.

 

மீண்டும் கொஞ்சம் தண்ணீரைக் கொடுக்க கண் விழித்த மரங்கொத்தி எழுந்து உட்கார்ந்தது.  ஒருக்கால் பழம் தின்னுமோ என்றெண்ணி ஒரு உரித்த வாழைப் பழத்தினை அதன் முகத்தருகே காட்டினேன்.  அப்போதுதான் பார்த்தேன் அதன் எலிவால் போன்ற நாக்கு எவ்வளவு நீளமானது, அதன் நுனி எப்படிப் பட்டது என்பதை.  நுனியில் சுமார் ஒரு சென்டிமீடர் வரை ஈட்டிமுனையில் உள்ளது போன்ற பின் நோக்கிய முட்கள் இருந்தன. நுனி நாகினால் வாழைப் பழத்தைப் பதம் பார்த்த  மரங்கொத்தி தன் நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டது.  பழம் தின்பதில் ஆர்வம்                         Text Box: http://en.wikipedia.org/wiki/Image:Black-rumped_Flameback_I_IMG_9929.jpgகாட்டவில்லை.  மாமிச பக்ஷணியை சாக பக்ஷிணியாக்க நினைத்தால் நடக்குமா?

 

பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் மீண்டும் கொஞ்சம் நீரைக் குடித்துவிட்டு முதலில் குதித்துக் குதித்து நடந்த அந்தப் பறவை வீட்டிற்குள்ளேயே பறக்க ஆரம்பித்தது.  திடீரென திறைந்த கதவு ஒன்றின் வழியே வெளியே பறந்து சென்றது.

 

அன்று செய்ய வேண்டிய அலுவலகப் பணி ஒரு நாள் தள்ளிப் போயிற்று.  ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி என் மனதில்.

 

வெய்யில் நாட்களில் மனிதர்களுக்கு ஏற்படுவது போல பறவைகளுக்கும் வெய்யிலின் தாக்குதலும், உடலில் நீர் வற்றுவதால் மரணமும் சம்பவிக்கும்.  தோட்டத்தில் பறவைகள் குடிக்க / குளிக்க ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது பல பறவைகளை சாவிலிருந்து காப்பாற்றும்.

 

                                                  

                                                                                                                                                                                                     நடராஜன் கல்பட்டு

 

                                                                                          

                                                                                                   தொடரும்