அழியவிருக்கும் ஒரு பறவையைக் காப்பாற்ற : (6) சின்ன வல்லூறு

 

Text Box:

 

சின்ன வல்லூறு என்று ஒரு பறவை.  இதன் ஆங்கிலப் பெயர் ஸ்பேரோ ஹாக் (Sparrow hawk) என்பதாகும்.  சிட்டுக் குருவிகள் இதன் விசேஷ உணவு.

 

விஜயவாடாவில் ஒரு நாள் காலை வீட்டின் பின்புறம் நான் நின்று கொண்டு இருந்தபோது ஒரு சிட்டுக் குருவியை ஒரு சின்ன வல்லூறு துரத்திக் கொண்டு வந்தது.  குளியலறை சுவற்றருகே வந்தபோது சட்டென சிட்டு 90 டிகிரீ திரும்பியது.  சிட்டுக் குருவி மீதே கண் வைத்திருந்த வல்லுறு சுவற்றில் மோதிக் கிழே விழுந்தது. 

 

கிழே விழுந்த பறவையைக் கையில் எடுத்தேன்.  அதன் வாய் பிளந்திருந்தது.  கண்கள் மூடி இருந்தன.  அதன் வாயில் இரண்டு சொட்டுத் தண்ணீரை விட்டேன்.

 

தண்ணீர் உள்ளே சென்றதும் வல்லூறு கண்களை இரு முறை திறந்து மூடியது.  கூடவே அதன் விரிந்திருந்த கால் விரல்கள் மூட ஆரம்பித்தன.  அதன் ஒரு நகம் எனது இடது கை பெரு விரலைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.  கூரிய நகம் சதயைப் பொத்துக் கொண்டு எலும்பையே சென்றடைந்தது.  அதன் விறல்களைப் பிரிக்க எவ்வளவு முயன்றும் பயன் இல்லை.  வலியைப் பொறுத்துக் கொண்டு  இன்னும் இரண்டு சொட்டுத் தண்ணீரை அதன் வாயில் விட்டேன்.  மெதுவாக வல்லூறு எழுந்து என் கையிலேயே உட்கார்ந்தது.  அடுத்த கணம் அது பறந்து சென்று அருகில் இருந்த ஒரு செடியில் சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறி பின் பறந்து சென்றது.

 

Text Box:  அன்று நான் ஒரு இறக்கவிருந்த பறவையை மட்டும் காப்பாற்ற வில்லை.  ஒரு நல்ல பாடமும் கற்றுக் கொண்டேன், வல்லூறு போன்ற பறவைகளை வெரும் கையோடு எடுக்கக் கூடாது என்பதை.

 

அன்று புரிந்தது எனக்கு வல்லூறுகளை வைத்துக் கொண்டு முயல் வேட்டை ஆடுபவர்கள் ஏன் தடித்த தோல் கை உரை மாட்டிக் கொள்கின்றனர் என்று.

 

 

                                                                                                நடராஜன் கல்பட்டு

 

                                                              (படங்கள் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

 

 

 

                                                தொடரும்